Sunday, June 12, 2011

தமிழ்

தமியரெனும் அவப்பெயர் வராது தமகென்றொரு மொழிசமைத்து தமிழேன்றனர் நம் மூப்பர் .

நெற்றியில் பொட்டிற்ற மாது(ழ் ) அவள் எழில் கண்டு காதல் கவிதை இயற்றினார் பெரும் கவிஞர் .

செம்மண்ணுக்கும் மூல பொருள் என கற்கள் உண்டு ,செந்தமிழின் தொடக்கம் அதை சொன்னதில்லை என்நாள்காட்டியும் இங்கு .

பாற்கடல் சுரக்கும் அமுதம் என்பதோ மிகுபுனைவின் உச்சகட்டம் , என்தமிழே அதன் சுரபி என்பது நிதர்சனம் .

சிந்தையில் பொங்கிடும் தத்துவத்தை புனைந்தனர் புலவர் பலர் நம்நாட்டில் , இன்றும் பல்கி வாழ்கின்றனர் ஏட்டில் .

சங்கத்தில் கவியரசியும் ,திருவள்ளுவரும் தமிழில் தீற்றினர் நம் வாழ்கை ,அண்மையில் மகாகவியும் அக்கவியின் தாசனும் தீற்றியது புது கவிதை

விருந்தோம்பல் புகட்டும் செந்தமிழ் அதுவே , அத்துமீரல்தனை கண்டு பொங்கிடும் ரௌத்திரத்தையும் பழக்கும் .

கற்ற்காலத்தின் முன்தோன்றி ,இக்காலம் நிலைநாற்றி வரை ,எக்காலமும் வாழும் பெருமை உண்டு நம்தமிழிர்க்கு இதை உரைக்க சொல்வோம் உலகிற்கு.

Wednesday, June 1, 2011

குழந்தை தொழிலாளி எனும் சொல் இனி இல்லை அகராதியில்

வேறூன்றி தானாக நிற்கவும் இல்லை செந்தளிறுகள் ,அதற்குள் ஆயினரே பெரும் பொதி சுமக்கும் களிறுகள்.

வாய்பாடு பாடி கல்வி பயிலும் வயதில்,கூப்பாடு போடும் வியாபாரி ஆயினர் நெடுஞ்சாலையில் .

கருவறையின் கடும்வேப்பதில் உருவெடுத்து, பின் மண்ணில் புலம்பெயர்ந்த பின்னும் , வெடித்து கருகளைகின்றனர் பட்டாசு தொழிற்சாலையில்.

பத்து திங்கள் தூமைதனை தடை இட்டு , பிறந்த நன்குழந்தை விசைக்க படுகிறதே குப்பையில், இதற்க்கா வளர்த்தால் அன்னை தன் அகப்பையில் .

ஈரம் என்பது துளியும் இல்லை கல்லால் செய்த இவர்களின் அஹத்தில்,சிதைகின்றனரே பிஞ்சு கைகளை கடும் கந்தகத்தில்.

உடன் துளைந்த துளி உயிர்கள் உறைய உள்புகுந்து வந்தடைந்தனர் வையகம் , இருந்தும் வழி இல்லை வாழ கேட்கின்றனர் யாசகம் .

மண்ணை நுகர்ந்த சாமர பூக்களும் கையாள படுவதில்லை பூக்களாய் ,வறுமையில் வாடும் குழந்தையும் கையாள படுவதில்லை குழந்தையாய் .

சென்றடைந்தனர் இருவர் காதலின் எல்லைக்கு அதன் பரிசாய் பிறந்த மழழை அது "செல்வம் " அனால் வர்தகதிர்ர்க்கு இல்லை.



"நாளைய தலைமுறை சீராய் வாழ வழி நெடுவோம் ,ஆழியில் வளரும் குழந்தை தொழிலை விளிம்பிலேயே அளித்து விடுவோம் ".

குழந்தை தொழிலாளி எனும் சொல் இனி இல்லை அகராதியில்





Sunday, March 6, 2011

பணம் வாங்கும் காந்தை

சமத்துவத்தின் குறியீட்டு மொழி பேசும் மும்மாரி, அதை செயற்முறையில் அரங்கேற்றுபவளோ ஓர் ஜாரி.

விரகம் கொதித்தவன் ஏந்துகிறான் இச்சை கொண்டு சிரட்டைதனை, இணங்கி காசுக்கு பரிமாறுகிறாள் சிரத்தைதனை.

ஓரடி வயிற்றை வளர்க்க ஐந்தடி வளர்ந்திட்ட உடலை ஏலம் இடுகிறாள் கோதை, எடுத்தவனுக்கு இரவெல்லாம் அவள் காந்தை.

அரும்பாகி பின் அரும்பாடுபட்டு மலர்ந்தவள் சிதைந்தாள் முட்கள் மீது, தத்தை போல் திரிந்தவள் பரத்தை ஆனால் மெத்தை மீது.

தாசி அவளை தரிசிக்க தக்ஷனை இட்டனர் உண்டியலில், செய்தால் புணர் சேவை சிக்கி சூழ்ச்சியின் தூண்டிலில்.

ராகத்திற்க்கே தெரியாமல் மாறிவரும் கமகங்கள், வாழ்கை பாதையில் தொலைந்த இப்பூமகள் ஆனாலே ஓர் விலைமகள்.

அடிமை வர்த்தகம் மாறியதை நினைத்தேன் முன்தினம், அனால் மாறவில்லை அதன் பரிமாற்றமே விபச்சாரம்.

என்றோ நியமித்த சம்ப்ரதாயம் இன்றும் தொடர்கிறது, பெயர் பலகை ஏதுமின்றி கூறிட்டு தசை வியாபாரம் நடக்கிறது.

இவைகளை கண்ட என்மனம் பாரதியின் நன்கவிதை ஒன்றை உரைத்தது "நல்லதோர் வீணை செய்தே அதை....................................................................."

Thursday, February 17, 2011

காப்போம் இப்பொன்பூமியை


வெப்பம் பெருதுவக்க சிறு கோளம் ஒன்று பெரும் வெடிப்புதனை விளைவுற்றது அதில் கருத்தரித்த வளிமண்டலம் ஈன்று வெளியேறியது.

காட்சி பிழையோ என வியப்பூட்டி, பேசும் சித்திரமாக தோன்றிடும் இயற்கையும் அரங்கேறியது.

இழுது மீன்களில் தொடர்ந்து ,ஊர்வன பிராணிகளை கடந்து முற்றில் பாலூட்டிகள் பிறப்பெடுத்தது.

அதிலோர் பிராணி பரிமாற்றங்களில் வந்து பலமாற்றங்களை கொண்டு நரன் என உருமாறி நவயுகம்வரை வந்தடைந்தது .

பெரும் மூளைமடிப்புகளோடு பேராற்றலையும் இணைத்தவன் எழுப்பிய தொழிற்சாலை கக்கிடும் விஷவாயு ,நுகர்ந்த காற்றுக்கும் மூச்சடைத்து.

கரியமிலம் வாய்வாயுதனை மணந்து கொண்டு, உயிர்வைவை தாரைவார்க்கும் நன்மரங்கள்,நன்றி மறந்து வெட்டி குவிகின்றான் அதன் பிணங்கள்.

சுமேரியனும் மனம் தளர்வான் வந்திங்கு அவன் புனைப்பின் வழி வந்த சிற்றூர்தி சூழலை குலைப்பதை கண்டிங்கு.

ஒசோனை கிழித்தது போதாதென்று கல்நெஞ்சம் கொண்டவன் துளைகின்றான் பூமியை எரிபொருளை தேடி சிதைகின்றான் முன் வசித்த மலைகளை பளிங்குகளை நாடி .

கற்காலத்தில் கற்களை கூர்மை செய்தான் கடும் விலங்குகளை தாக்க , இன்றோ அணுஆயுதங்கள் பரிசொதிகின்றான் அண்டை நாட்டினை தாக்க.

நன்விளைச்சல் நிலமும் தரிசானது, மும்மாறியோ அமிலம் ஊற்றுது.

இசீர்குலைவை தாங்காது இப்பொன்பூமி அந்தம் அறுந்துவிடுமோ தற்கொலை நாடி மீண்டும் வெப்பத்தை பெருதுவக்குமோ புத்தம் புது தளிராய் மாறி?

Tuesday, February 15, 2011

பார்பன பெண்ணே


ஏழு ஸ்வரங்கள் ஒன்றிணைந்து இயக்கிய சங்கீத பெண்ணே.

இரு கண் சமிக்கையில் என்னை உன்வசபடுத்திய அழகியே கண்ணே.

என் இம்புலத்திலும் கலந்துவிட்ட ஆருயிர் பெண்ணே.

நான் எட்டி தொட துடிக்கும் காதல் விண்ணே .

புலம் பெயர்ந்து அக்கரை சென்றதைந்த பார்பன பெண்ணே.

இன்றும் உன் உவகைக்கு ஏங்குகிறது என் உல் அஹமே.

என்றோ என்னை ஏற்பாய் என சொல்லடி பார்பன பெண்ணே

செந்தாமரை



வான் மழை அது பொழிந்திடும்,மரம் அதில் நனைந்திடும்.

மரத்தை நனைத்துவிட்டு அம்மழை அது ஓய்ந்திடும்.

எழுந்திடும் மெல்ல காற்று அது எழுந்திடும்.

நனைந்த மரம் அதில் குளுங்கிடிம் , அதில் இலைதனில் தேங்கியநீர்த்துளிகள் கவிழ்திடும்.

இலையை விட்டு கவிழ்ந்த நீர் எனவளின் முகத்தில் வந்து விழுந்திடும்.

நீருக்குள் மூழ்கிய செந்தாமரையாய் அக்காட்சி தோன்றிடும்

அழகி

அது ஒரு அழகான மாலை நேரம் .

அதற்க்கும் அழகு சேர்த்த வர்ணம் வந்தாள் என் அழகி.

என் எதிரில் அமர்ந்தாள் அந்த வெகுளி ...

கைகளில் என் இதயத்தை வைத்திருந்தாள் கொஞ்சம் அழுத்தி.

என்ன அது உன் கையில் என்றேனே நான் குரல் உயர்த்தி.

மருதாணி என புறம்பு புகழ்ந்தாயடி என் அழகி.

பொய் என அறிந்தும் நான் காட்டி கொள்ளவில்லை அடி என் அழகி.

தோழமை

பசும்புல்லின் நுனியில் அகரம் கொள்ளும் வெம்பணி, அது தூய்மையின் செம்மை.

அதனையும் பின்தங்க வைத்திடும் நம் உள்ளத்தில் வீற்றிடும் தோழமை.

சுற்றத்தில் இல்லை என்றாலும், உற்றத்தில் வரவில்லை என்றாலும் என்றும் சுயநலம் கொண்டதில்லை.

அகசியம் செய்தாலும்,சில அகடம் புரிந்தாலும் என்றும் மனம் வெம்ப வைத்ததில்லை.

முகனகை பாராமல், அகனகைதனை கண்டு ஆற்கொள்ளுமாம் நட்பு நம்மை.

நன்நட்பு அமைதிராதநன் வாழ்க்கையோ ஒன்றுக்கும் உதவிடாத ஓர் உடம்பை.

நம் குறைதனிலும் நிரைதனை சேகரித்து அழகாய் எடுத்துரைக்கும் நேர்மை.

என்றும் மங்கிடாத வெய்யோனை போன்றது நம் நெஞ்சத்தில் ஒழி பேருக்கும் தோழமை.

கண்ணீருடன் மஹேஷ்

உணர்ச்சி இழந்து இறந்து கிடக்கும் பெண்ணின் மார்பகத்தை அகற்றி பார்க்கும் சிங்களவனே உன்னை விட பின தின்னி கழுகு மேலானது.


உன் தாய் அவளுக்கு இருபதும் இதே அங்க உறுப்புக்கள் தானென்று ஏனோ இன வெறி எனும் விஷம் பாய்ந்த உன் சிந்தை மறந்தது.


உமது அராஜகத்தை பார்த்த புத்தர் பெருமானின் சிலை, அதுவும் குருதியில் கண்ணீர் வடித்தது.


இரும்பு தொப்பியாம் தலையில் உனக்கு, அனால் சிறு குழந்தையின் மண்டை ஓட்டை உமது காலணிகள் சிதைத்தது.


கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தை உமது தோட்டாக்கள் துளைத்தது அதை கண்டும் காணாமல் என் நாடாளும் கட்சி அதற்க்கு துனைத்தது.


இவை அனைத்திற்கும் ஒரு நாள் பதில் அடி உள்ளது என என் அஹம் உரக்க உரைத்தது


கண்ணீருடன் மஹேஷ்


பூபாளம்

சிப்புக்குள் நித்திலம் போலே அமைத்திருந்தேன் உன்னை என் உல் அகத்தில்.

கிழித்தெறிந்து வெளி ஏறி விட்டாய்.

அதில் அஸ்தமனம் ஆனது என் வாழ்கை.

இப்போதேனடி பூபாளம் பாடுகிறாய்.

பொது உடமை


ஆதாம் ஏவாள் ஒன்றிணைய வந்தான் மனிதன் என்கிறது ஆத்திகம்.

குரங்கிலிருந்து உருவெடுத்தான் மனிதன் என்கிறது விஞ்ஞானம்.

இரண்டில் எதை வழி மொழிந்தாலும் நம் பூர்வீகம் ஒன்றே என்பது உண்மை.

ஆயினும் ஏனோ இங்கு ஜாதி பிரிவுகள் சொல்லி வேற்றுமை.

சமத்துவம் என படுகிறது ஆனாலும் இருப்பது ஏற்ற தாழ்வு.

ஏழைகளுக்கு திறப்பதில்லை முதலாளித்துவத்தின் கதவு.

மக்களாட்சி என முகமூடி அணிந்து நடப்பதோ ஏகாதிபத்தியம்.

இந்த அவலம் ஓர் நாள் சீர் அமையும் என்பது சத்தியம்.

இந்நிலையை மாற்றி அமைப்பதென்பது ஒவ்வொரு இலைஞ்யனின் கடமை.

அதற்க்கு ஏற்ற ஆயுதம் அது பொது உடமை

மழை

இருண்டு திரியும் கார்முகில்கள் கண்டன என்னவளை.

அவள் எழில் தனில் மயங்கி மறந்தன தன்னிலை.

வந்த மயக்கத்தில் மிதந்தன காற்றிலே அவள் முகாந்திரம் தேடி.

மிதந்ததில் கிடைத்ததோ ஏமாற்றமே என் அழகியை நாடி.

அதை தாங்காது முயன்றன தற்கொலை ஒருவருக்கொருவர் மோதி.

அதன் விளைவை பாருங்களேன் மழை.

மாய்கிறதே மனித இனம்

அன்று பொருள் பரிமாருதலை மாற்ற கண்டேக்குக்கபட்ட ஒரு ஊடகம் பணம்.

என்றறிந்தும் சில சுயநலவாதிகள் அதை பறிமுதல் செய்வதால் வறுமையில் வீழ்கிறதே இங்கு பிணம்.

சமிக்கைகளை காட்டி பரிபாஷை தனை தீட்டி நம் எண்ணங்களை பகிர்ந்தோம் நம்மவர்களிடம் என்றோ.

அதை மாற்றிடவே கண்டேக்குகபட்ட ஒரு ஊடகம் இந்த மொழி.

என்றறியாது எம்மொழியே செம்மொழி என்ற சண்டையில் மாய்கிறது மனித இனம்.

மனிதர் நலம் கருதி அமைந்த இவிரண்டினாலே ஐயோ மாய்கிறதே மனித இனம்

பொய்

கவிதைக்கு அமுதூட்டும் எனப்படும் பொய் அதுவே நம் வாழ்வுதனை எரிக்கும் அமிலமும் ஊற்றும்.

புறம்பு புகழ்ந்து புறம் நீ சேர்த்த யாவும் மெய்பொருள் சேராது; புதைந்தழிந்து போகும்.

பொய் சுரக்கும் வாய்க்கு கிட்டாது போஜனம் என்றும் ஒரு மொழி உண்டு.

ஆனால் வயிற்றுக்கு உண்ணவே மெய்தனை மறுக்க வேண்டும் என ஒரு நியதி இன்று.

இயல்பான தோற்றத்தை பெருதுவக்கி காட்டிடும் இளங்கதிர் தீண்டியதால் வரும் நிழல் பிம்பம்.

அதுவே நிஜ பிம்பம் தொட நினைத்து அணுகி அருகில் சென்றடைய சுருங்கி போகும் ஓர் அதமம்.

தாகத்தை தணிப்பதர்க்கு பாலையில் தண்ணீர் தேடி அலைகையில் தூரத்தென்படும் நீர் கானல்.

நேர்மைதனை மறந்து அல்பமாக வாழ்பவனின் வாழ்க்கையோ காற்றுக்கு ஏற்றால் போல் ஆடிடும் நாணல்.

பொய் வாய் வாயிலாக நீ நடத்தும் யாவும் தற்காலிக தடை இன்றி சீராய்ச் செல்லும்.

அதை உடைத்தெறியும் வகையில் சீறி எழுந்து பொய்தனை சீரழித்து இறுதியில் வாய்மையே வெல்லும்



குளிர் காலம்.

உதிரத்தை உறைய வைக்கின்ற காலம் .

இது மனதை வருட வருகின்ற காலம்.

தொடக்கத்தில் இலைகளை உதிர்த்து விடும் காலம்.

பின்பு கிளைகளில் புதியதாய் இலைகள் உதித்திடும் காலம்.

உதித்த இலைகளும் பனித்துளி அமர்ந்த குழிவுதனில் நடுங்கிடும் காலம்.

வானமும் வெண்ணிற சாமரங்கள் தூவி நெகிழ்திடும் காலம்.

புனித ஏசு பிறந்ததும் இக்காலம்,ஆழ்வார்கள் பாசுரங்கள் தீட்டியதும் இக்காலம்.

காதலர்களின் நெருக்கத்தை கூட்டுவதும் இக்காலம்.

தம்பதியரின் புணர்தலை தூண்டுவதும் இக்காலம்.

அதுவே சில்லென்ற காற்றின் வாயிலாக உவகைதனை காட்டும் குளிர் காலம்.

காதல் கதை கேளூங்கல்

கண் பார்வை படர்ந்த திசை எங்கிலும் படர்ந்து மிதந்தன பனி காற்றுடன் சேர்ந்து மூடிபனியும் காதல் கொண்டு .

அத்தருணத்தில் அங்கன்னில் தென்பட்டது ஒரு கோமேதகம்(அவள் முகம்),படர்ந்து திரியும் மூடுபனியை கிழித்து கொண்டு.

அத்தோற்றத்தை கண்டனன் உறைந்து நின்றேன் நாபுறமும் உயர்ந்து நிற்க்கும் பணிமலையுடன் சேர்ந்து.

அவ்விடத்தை விட்டு நகராமல் அவளை ரசித்தேன் சாமரங்கள் தூவிடும் பணிமழையுடன் கோர்ந்து.

வாவென்று என்னை இழுத்து சென்றது என் நட்பு பட்டாளம் பனி மழையில் நனைந்தால் காய்ச்சல் பெருக்கி விடுமோ என்று.

இருந்தும் ஒப்ப வில்லையே என் சிந்தை கண் திரைதனை விட்டு மங்கிவிடும் நன்காட்சி என்று.

மனமில்லாமல் மெல்ல ஊர்ந்து வந்தடைந்தேன் அகரம் நாடி என் அறைக்கு, அககண் பார்வையை மட்டும் அவ்விடத்திலேயே விட்டு விட்டு.

மற்றொரு நாள் கிடைத்தது அவள் நட்பு இன்னொரு நண்பன் வாயிலாக, அன்று அறிமுகம் ஆனது அவள் முகாந்திரம் என்னவென்று.

சந்தோசத்தில் திகட்டினேன் நான் அனால் அடுத்த நாளே கிளம்பலாயிற்று கொண்ட கல்வி சுற்றுலா முளுதடைந்து .

எனகென ஒதுக்கிய ஆசனத்தில் அமர்கையில் ஆச்சிரியத்தின் உச்சத்துக்கே சென்றமர்ந்தேன் அவளும் எனருகே வந்து இருக்காய் கொள்ள .

வழக்கத்துடன் ஆரம்பித்த பேச்சுக்களுடன் சேர்ந்து நகர்ந்தது நேரமும்,ஒரு வழியாய் வந்தடைன்தேன் என் வீட்டிற்க்குள் ஊர்ந்து மெல்ல .

வந்தது குறும் தகவல் என் கைபேசியில் அவள் எண்ணில் இருந்து "உன்னுடன் இருந்தது பிடித்தது என்று.

அக்கணமே நானும் பதிலளித்தேன் தோழியே எனக்கும் என்று.

நாட்கள் கழிந்தன நாட்காட்டியில் திகதிகள் கிழிந்தன திடிர் என ஒரு நாள் மலர்ந்தது உன் நன்நட்பு காதலாய் என்றாள் .

வாயடைதுபோன நானோ சபித்தேன் என் சிந்தையை ஏனோ தக்கதருணத்தில் இப்படி செயலிழந்து பொய் விடுகிறாய் என்று.

ஒரு வழியாய் இயல்பு நிலைக்கு வந்த மறுகணம் நானும் வீவரித்தேன் என்னுள்ளத்திலும் மலர்ந்ததடி இக்காதல் என்று .

அவள் என்னை நினைத்தால் , அனுதினமும் நனைத்தாள் உவகை ஊற்றாக.

நானும் அவளை நனைத்தேன் தினம் தினம் மழையாக.

கொற்றும் ஊற்றை அடைத்து வைக்க நினைத்தேன் என் ஐம்புலதின்னுள் காற்றாக.

நான் உன்னுடன் காதல் வசத்தில் விழுந்தது எல்லாம் ஒரு உற்சாகத்தில் என்றால் அதே குறும் தகவல் வாயிலாக.

படபடத்து போன நானோ கேள்வி அம்புகளை எய்தேன் அதே குறும் தகவல் வாயிலாக.

போதும் தொந்தரவு செய்யாதே என விடை அளித்தால் அதே குறும் தகவல் வாயிலாக.

என் இதயத்தில் நான்கின் ஒரு அறை துடிக்கிறது அவள் காண்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விடு என்று.

அனால் மற்ற மூன்று அறைகளும் வினாக்கள் எழுப்புகின்றனவே ஏன் முடிக்க வேண்டும் மீண்டும் வருவாள் என்று.

நிலை புரியாமல் தவித்தேன் அது என்ன உற்சாகம் என்று,விடை கொடுத்தால் அட உன்னை பிடிக்கும் ஆனால் காதல் இல்லை என்று .

முடித்தேன் அந்தாதியை போதும் என்று, அடித்தேன் ஒட்டடை தங்க சிலை அல்ல சிலந்திகளின் வலை என்று .


சிற்பி


கல்லில் உறங்கும்கற்சிலைக்கு
உயிர் தரும் சிற்பி போல்

என்னுள் உழன்று கிடக்கும்
கவித்துவத்தைஉயிர்ப்பித்த
நீயும் சிற்பி தானடி..

என் அழகி !

அந்தச் சிற்பியின் ஆயுதம்உளி..
இந்தச் சிற்பியின் ஆயுதம்விழி..

உன் விழியெனும்உளியால்
என் கவிச் சிற்பத்தை
செதுக்கிய சிற்பியடி நீ..!!

மூட நம்பிக்கை

மூட நம்பிக்கைக்குள் மூடிக் கிடக்கும் கணவான்களே
சிந்தியுங்கள்!

ஒற்றைக் காலில் நின்றால் தரித்திரம் என்றால் உங்கள்
நடராஜரும் ஒரு தரித்திரமே..!!

நீங்கள் நடத்தும் யாகத்தில் வீணாகும் நெய்
அதைக் கண்டு நெருப்புக்கும் வயிறு எரிகிறதே..!!

கை ரேகையில் எதிர்காலம் காண்பது என்றால்
கை இல்லாதவனுக்கு இல்லையா எதிர்காலமே?

கழுதை முகம் பார்த்தால் யோகம் என்றால்
அதன் உழைப்பைப் பின்பற்றினால் பாவமோ?

தெற்குத் திசை நோக்கித் தலை வைத்தால் ஆகாது என்றால்
அத்திசையில் வசிப்பவர் மனிதர் இல்லையோ?

பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என்றால்
யானை குறுக்கில் ஏறினால் சுபசகுணமோ..?

மூட நம்பிக்கைக்குள் முடங்கிக் கிடக்கும்
மூடர்களே சிந்தியுங்கள்..!!

இனிச் சீறி எழும் எங்கள் ஈழம்.

உயிர் பிரிந்த யாக்கை எரியும் ஏறி தழலில்
உயிரோடு நாங்கள் எரிகின்றோம் சொந்த
மண்ணில்..

வெடிகுண்டு வெடித்தது எட்டுத் திசை
அதில் சிக்கிச் சிதைந்தது எங்கள் தசை.

எங்கள் உதிரம் கலந்ததினாலோ இந்தச் செம்புலம்
அதில் விதைத்தார்கள் எங்கள் பிண்டம் எனும்
உரம்..

இத்தனை துன்புறுத்தல்கள் அனுபவித்தது
நாங்கள்
ஆயினும் உங்கள் அகராதியில் தீவிரவாதிகள்
எனப்படுகிறோம் நாங்கள்

உங்கள் கைகளால் அழிந்தது போதும் எங்கள் நிலம்
இனிச் சீறி எழும் எங்கள் ஈழம்.

அன்னையின்றி வேராருமில்லை

நம்மை சுமை என்று எண்ணாது பத்துத் திங்கள் அகடிலும் வாழ்நாள் எல்லாம் அகலங்கமான உலகத்திலும் சுமக்கின்றவள்

ஆழி அதன் ஆழத்தை விடவும் ஆழமான அமரைதனில்வைத்து நம் உயிர்தனை வளர்க்கின்றவள்

சுயநலம் ஏதுமின்றி தன் உயிரை வருத்திக் கொண்டு நம்மை இங்கு உயிர்ப்பித்தவள்

செங்குறுதியைப் பாலாக்கி நம் வயிற்றுப் பசியாற்றிப் பெருமிதம் அடைகின்றவள்

கேள்வி ஏதும் இல்லாமல் நம் நலன் எண்ணிப் பல வேள்வி தனைப் புரிகின்றவள்

தன்னைப் பற்றிக் கவலை இல்லாது நம் வாழ்வில் இருளகல ஊனுருக்கி அகலாக எரிகின்றவள்

தவழ்ந்து நீ நடந்தால் முழங்கால் காயமாகுமோ என்று அகக்கையில் தாங்குபவள்

எட்டெடுத்து நீ நடப்பதை கண் இமைக்காது கண்டு மெய் மறந்திருப்பவள்

எதிர்பார்ப்பு ஏதுமின்றி உவகைக்கடல் தன்னில் நம்மை மூழ்கடிப்பவள்

இத்தனைப் பெருமை நிறைந்து இருக்கும் அந்த ஆக்கமகள் நம் அன்னையின்றி வேராருமில்லை