தூணிலும் துரும்பிலும் அகரித்திருக்குமாம் ஓர் உவமை, அதற்கென எழுப்பினர் மாபெரும் ஆலயம்
அஇலக்கணத்தின் எதிர்மறையாய் வாழும் மனிதனுக்கோ சாலை ஓரத்திலே அமைந்தன நிலையம். .
சித்தாந்தத்தில் நெறி கொண்டு அந்நெறி வெறியாகி மதம் என்று உருவெடுத்தது ,
நெறிக்கும் வெறிக்கும் இடையில் சிக்கி சிதைந்து மனிதநேயம் நிலைகுழைந்தது .
மதத்தின்பால் மனம் கொண்டு வாசல் பொரித்ததோர் தரப்பு ,எதிர்மதத்தின்பால் மதம் கொண்டு பெயர்த்து வீழ்த்தியது மறுதரப்பு ,என்றோ வைத்த திடை கொழுந்து இன்றும் தழல்நெருப்பு .
பழந்தமிழ்நாட்டில் வேற்று மதத்தினரை(சமணர்களை ) கழுவில் ஏற்ற பறைசாட்ட பட்டது ஒரு மரபு , அதை இன்றும் வேறொரு பரிமாற்றத்துடன் வழிமொழிகிறது அரபு .
சுட்டதினால் தீயை கடவுளென்றார்,சுழன்றதினால் காற்றை ,பரிமாற்றம் அடையவில்லை இவர்களின் கற்பனை , அனால் பரிணாமம் வளர்த்து வீதி தோறும் கடவுள் திரிகின்றனர் பூசி கொண்டு ஒப்பனை .
கடவுளின் பெயர் கொண்டு அதில் விஷமத்தின் விஷம் பாய்ச்சு பெரும் ராஜாங்கம் (ரஷ்ய )அதை நிலைகுலைய செய்தான் ஓர் வித்தகன் (ரஸ்புடின் )அவனிடம் இருந்து மீண்டும் நிலை செய்தான் ஒரு ரட்சகன் (லெனின் ).
எட்டுத் திசை தேடியும் அகப்படாத கானலை தேடி தவித்து அலைகிறான் ஆத்திகன் , அன்பெனும் தடாகம் தன்னில் தோண்டி தாகம் தீர்த்து கொள்கிறான் நாத்திகன் .
நன்றி கடவுளே நானும் நாத்திகன் .
Wednesday, March 7, 2012
நாத்திகன்
Subscribe to:
Post Comments (Atom)
Fact da :) :)
ReplyDeleteNice finishing.. :) :)
Gr8 :)