உலகை வர்ணித்த வண்ணம் பல வண்ணங்கள் இங்கு ஜாலமிட்டிருந்தும் , மனிதனில் வர்ணஜாலங்களை இயற்றினான் மனிதன் .
ஒரே குலம் என ஈன்றவனாயினும் வெட்டினான் பல "குலங்களை" செய்தொழில் அதைக்கொண்டு; குழுமினான் குலங்களில் மனிதன் .
இறைஅடிநாடும் பட்டனும் ஓர்ஊழியன் , பறை அடி ஆடும் கலைஞனும் ஓர்ஊழியன் , போர் நெறி நாடும் சத்ரியனும் ஓர்ஊழியன் ,நெற்கதிர் நாடும் உடையானவனும் ஓர்ஊழியன் , நான்கிற்கும் முடிவுரை ஊதியம் தான்; இதில் தாழ்வென்ன உயர்வென்ன சாதியும் தான்.
இலைதனில் இரை இட உழைத்தவன் அடித்தட்டில் , உழைத்தவன் உழைப்பை இடை நோகாமல் புசிப்பவன் மேல் தட்டில் .
தண்ணீர் தரிக்கும் குளம் பொறித்தவன் குலம் தாழ்த்தி தீண்டாதவனானான் , தான் பொரித்த குளம் தரிக்கும் நீரை தீண்டாமலானான்.
இயற்கையில் இருக்கும் பிரிவினை போதாதென்று மதம் ,நிறம் என பிரித்து முடிச்சுக்கள் இட்டோம் , அதில் தொடர்ந்து பாகப்பிரிவினை செய்து சிக்கலாக்கிவிட்டோம் .
" உலகை வர்ணிக்கும் வண்ணம் இடும் ஜாலம் எழில் கொண்டிருக்கும் , மனிதன் ஆடும் வர்ணஜாலம் குருதியின் கரை கொண்டிருக்கும் "
No comments:
Post a Comment